டெல்லி முதல்வர் வீட்டுக்காவலில் வைப்பா...? போலீசார் மறுப்பு

முதல்வர் அரவிந்த கெஜ்ரிவாலை வீட்டுக் காவலில் வைத்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்த புகாருக்கு டெல்லி போலீசார் மறுப்பு தெரிவித்து உள்ளனர்.

Update: 2020-12-08 09:56 GMT
Image courtesy : ndtv.com
புதுடெல்லி

டெல்லியில் மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக  இன்று 13 நாளாக  லட்சக்கணக்கான விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்த நிலையில் டெல்லியில் போராடும் விவசாயிகளை அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று சந்தித்து பேசினார்.

 மேலும் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவும் தெரிவித்தார். அதன் பின்னர் முதலமைச்சரின் இல்லத்துக்குள் வெளியாட்கள் செல்லவோ, அவர் வெளியில் செல்லவோ விடாமல் போலீசார் கெஜ்ரிவாலை வீட்டுச்சிறையில் வைத்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.ஆனால் முதலமைச்சரை காவலில் வைக்கவில்லை என்று டெல்லி போலீசார் விளக்கமளித்துள்ளனர்.



மேலும் செய்திகள்