காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை - மாவட்ட ஆட்சியர்
காரைக்காலில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
காரைக்கால்,
வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ‘புரெவி’ புயல், இலங்கை பகுதியில் புயலாக கடந்து மன்னார் வளைகுடா பகுதியில் வலுவிழந்து, தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் நிலை கொண்டது.
இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கடந்த 3 நாட்களுக்கு மேலாக பல இடங்களில் மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்றும் புதுச்சேரி மாவட்டம் காரைக்காலில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், கரைக்காலில் பெய்து வரும் தொடர் கன மழை காரணமாக காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே 2, 3, 4 ஆகிய தேதிகளில் விடுமுறை விடப்பட்ட நிலையில் மழைநீர் வடியாததால் இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.