அந்தமானில் ரிக்டர் 4.3 அளவில் நிலநடுக்கம்
அந்தமானில் உள்ள திக்லிபூர் பகுதிக்கு தெற்கே 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
போர்ட் பிளேர்,
அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் இன்று மாலை 7.05 மணிக்கு 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமானில் உள்ள திக்லிபூர் என்ற இடத்திற்கு தெற்கில் 55 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அதிர்வு சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் உணரப்பட்டது.
மேலும் தரைப்பகுயில் இருந்து சுமார் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையம் உள்ளதாகவும் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக உயிரிழப்புகள் மற்றும் பொருள் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.