இந்த அரசு பொய் மற்றும் கொள்ளைக்காரர்களுக்கானது - மத்திய அரசு மீது ராகுல்காந்தி விமர்சனம்

மத்திய அரசு, பொய் மற்றும் கொள்ளைக்காரர்களுக்கானது என்று ராகுல்காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

Update: 2020-12-02 06:43 GMT
புதுடெல்லி,

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராடி வரும் நிலையில், மத்திய அரசுக்கு ராகுல் காந்தி தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் டெல்லியில் போராடி வரும் நிலையில், மத்திய அரசுக்கு தனது கடும் கண்டனத்தை ராகுல் பதிவு செய்துள்ளார்.

இது குறித்து அவர் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என்று மத்திய அரசு கூறுகிறது. ஆனால், அவர்கள் என்ன செய்கிறார்கள், தங்களது நண்பர்களின் வருவாயை நான்கு மடங்காக்குகிறார்கள், அதே வேளையில் விவசாயிகளின் வருவாய் பாதியாகக் குறைக்கப்படுகிறது. 

இந்த மத்திய அரசு பொய் மற்றும் கொள்ளைக்காரர்களுக்கானது, சூட்டு கோட்டு போட்டவர்களுக்கானது எம பதிவிட்டுள்ளார்.

அண்மையில் விவசாயிகளின் மீது போலீசார் தடியடி நடத்தியது தொடர்பாக ஒரு செய்தி சேனலில் வெளியாகி இருந்த  வீடியோவை ராகுல்காந்தி பகிர்ந்துள்ளார்.

மேலும் செய்திகள்