பி.எம்.கேர்ஸ் நிதி எங்கே போய் விட்டது? மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி கேள்வி

பி.எம்.கேர்ஸ் நிதி எங்கே போய் விட்டது? அதன் எதிர்காலம் என்ன என்று யாருக்காவது தெரியுமா? என மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பி உள்ளார்.

Update: 2020-12-02 03:04 GMT
கொல்கத்தா, 

மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

மத்தியில் உள்ள பா.ஜனதா அரசின் விருப்பத்திற்கு ஏற்ப எனது தலைமையிலான மாநில அரசாங்கம் செயல்படாது. விசாரணை முகமைகள் மூலம் எங்களை அவர்கள் அச்சுறுத்துகிறார்கள். அதற்கெல்லாம் நாங்கள் பயப்படவில்லை. அது (பா.ஜனதா) ஒரு அரசியல் கட்சி அல்ல, பொய்களின் குப்பை.

பி.எம்.கேர்ஸ் நிதி எங்கே போய் விட்டது? அதன் எதிர்காலம் என்ன என்று யாருக்காவது தெரியுமா? ஏன் அது தணிக்கை செய்யப்படவில்லை?. கொரோனாவை கட்டுப்படுத்த அவர்கள் எங்களுக்கு என்ன கொடுத்தார்கள். ஆனால் பாடம் எடுக்கிறார்கள். புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக பிரச்சினையில் பா.ஜனதாவை எந்த கட்சிகளும் ஆதரிக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்