குஜராத் கொரோனா மருத்துவமனை தீ விபத்து சம்பவத்தில் 3 டாக்டர்கள் கைது

குஜராத்தில் கொரோனா மருத்துவமனை தீ விபத்து சம்பவத்தில் 3 டாக்டர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2020-12-01 02:16 GMT
ராஜ்கோட்,

குஜராத்தில் ராஜ்கோட் நகரில் உள்ள உதய் சிவானந்த் என்ற மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.  இந்த மருத்துவமனையில் கடந்த 27ந்தேதி அதிகாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 5 கொரோனா நோயாளிகள் சிக்கி பலியானார்கள்.  பலர் காயமடைந்தனர்.  தீ விபத்து பற்றி விசாரணை மேற்கொள்ளும்படி மாநில முதல் மந்திரி விஜய் ரூபானி உத்தரவிட்டதுடன், தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.

இதுபற்றி துணை ஆணையர் தலைமையில் விசாரணை நடத்திய ராஜ்கோட் போலீசார் 5 மருத்துவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.  இந்நிலையில், மருத்துவமனையை நடத்தி வரும் கோகுல் லைப்கேர் தனியார் நிறுவன தலைவரான டாக்டர் பிரகாஷ் மோதா, விஷால் மோதா மற்றும் டாக்டர் தேஜஸ் கரம்த் ஆகிய 3 பேரை போலீகார் கைது செய்துள்ளனர்.

அவர்களுக்கு நடத்திய கொரோனா பரிசோதனை முடிவில் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள்.  இந்த மூன்று பேர் தவிர தேஜஸ் மோதிவராஸ் மற்றும் திக்விஜய்சின்கா ஜடேஜா ஆகிய 2 பேர் உள்பட 5 பேர் வழக்கில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்