பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா ஆகியோர் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர்

கொரோனா பாதித்தவருடன் தொடர்பில் இருந்ததால் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா ஆகியோர் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர்.

Update: 2020-11-17 23:47 GMT
ஸ்ரீநகர், 

காஷ்மீரின் முன்னாள் முதல் மந்திரிகளான பரூக் அப்துல்லா மற்றும் அவரது மகனான உமர் அப்துல்லா ஆகியோர், கொரோனா நோயாளியுடன் தொடர்பில் இருந்ததால் அவர்கள் தாங்களாகவே தனிமைப்படுத்திக் கொண்டு உள்ளனர். இதை உமர் அப்துல்லா அறிவித்தார். “நானும் தந்தையும் தொடர்பில் இருந்த ஒருவரின் உறவினருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதையடுத்து மருத்துவ ஆலோசனைப்படி நாங்கள் எங்களை தனிமைப்படுத்திக்கொண்டோம்” என்று டுவிட்டர் பதிவில் கூறி உள்ளார்.


மேலும் செய்திகள்