லவ் ஜிகாத்துக்கு எதிராக விரைவில் சட்டம்: மத்திய பிரதேச உள்துறை மந்திரி தகவல்
லவ் ஜிகாத்துக்கு எதிராக விரைவில் சட்டம் கொண்டு வரப்படும் என மத்திய பிரதேச உள்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
ஜெய்பூர்,
லவ் ஜிகாத்துக்கு எதிரான சட்டம் விரைவில் அமலுக்கு வரும் என மத்தியபிரதேச உள்துறை மந்திரி நரோட்டம் மிஸ்ரா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், 'இந்த சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தவர்களுக்கு ஜாமீன் கிடைக்காது.
குற்றம் செய்தவர் மற்றும் அவருக்கு உறுதுணையாக இருந்தவருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும். விருப்பத்துடன் மதம் மாற்றம் செய்து திருமணம் செய்து கொள்ள நினைப்பவர்கள் ஒரு மாதத்திற்கு முன்பாகவே ஆட்சியர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டியது அவசியம்' என்றார்.
லவ் ஜிகாத்திற்கு எதிராக சட்டம் கொண்டு வருவது பற்றி பரிசீலிப்பதாக கர்நாடகா மற்றும் அரியானா மாநில அரசுகள் சமீபத்தில் கூறியிருந்தது நினைவிருக்கலாம்.