தெலங்கானாவில் கடந்த 24 மணி நேரத்தில் 661 பேருக்கு கொரோனா

தெலங்கானாவில் கடந்த 24 மணி நேரத்தில் 661 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-11-15 05:57 GMT
ஐதராபாத்,

தெலங்கானா மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 661 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,57,374 ஆக அதிகரித்துள்ளது.

தெலங்கானாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,404 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரம் 1,637 பேர் ஒரே நாளில் கொரோனா பாதிப்பில் இருந்து குணடைந்துள்ளனர். தற்போது தெலங்கானாவில் 15,425 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை மொத்தம் 2,40,545 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்