பீகாரில் அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது - நிதிஷ்குமார்
பீகாரில் இன்று மாலை அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது என நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
பாட்னா,
நிதீஷ் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
பீகாரில் இன்று மாலை அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது. நவம்பர் 15ஆம் தேதி மதியம் 12.30 மணிக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. அதன்பின் அனைத்து முடிவுகளும் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.
பீகார் சட்டசபைத் தேர்தலில் பாஜக (74), நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் (43) இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.