டெல்லியில் பாஜக தலைமையகத்தில் பிரதமர் மோடிக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
பீகார் சட்டசபை தேர்தல் வெற்றியை கொண்டாடும் வகையில் டெல்லி பாஜக அலுவலகத்தில் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பிரதமர் மோடி, பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு அக்கட்சித் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
புதுடெல்லி,
பீகார் சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணியின் வெற்றியை அக்கட்சித் தொண்டர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி, அமித் ஷா, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஜே.பி.நட்டா திறந்த காரில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். பாஜக தொண்டர்கள் மலர் தூவியும், பட்டாசுகளை வெடித்தும், அவரை உற்சாகமாக வரவேற்றனர். ஆடல் பாடலுடன் வரவேற்பு நடைபெற்றது. தொண்டர்களை நோக்கி பிரதமர் மோடி வெற்றி அடையாளத்தை காட்டினார்.