மேற்கு வங்காளத்தில் 8 மாதங்களுக்குப் பிறகு புறநகர் ரெயில் சேவை தொடக்கம்

மேற்கு வங்காளத்தில் 8 மாதங்களுக்குப் பிறகு இன்று புறநகர் ரெயில் சேவை தொடங்கியுள்ளது.

Update: 2020-11-11 08:21 GMT
கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் கொரோனா பெருந்தொற்று அச்சுறுத்தல் காரணமாக  நிறுத்திவைக்கப்பட்டிருந்த 696 புறநகர் ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டுள்ளன. கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகள் முழுமையாக கடைபிடித்து ரெயில் சேவை இயக்கப்படுகின்றன. 

ரெயில்களில் பயணம் செய்யும் பணிகள் முகக்கவசம் அணிதல், கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்தல், சமூக இடைவெளியைக் கடைபிடித்தல் போன்ற கொரோனா தடுப்பு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கிழக்கு ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது.

பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு ரயில் பெட்டிகள் நாள்தோறும் கிருமிநாசினி கொண்டு கழுவப்படும் என்றும், பயணிகளின் நடவடிக்கையை கண்காணிக்க ரயில்வே மற்றும் சிவில் காவல்படையினர் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் தென்கிழக்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியதையடுத்து   கடந்த மார்ச் மாதம் முதல் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் ரெயில் உள்ளிட்ட போக்குவரத்து சேவை முழுவதுமாக முடக்கப்பட்டிருந்தது. தொற்று பரவல் குறையத்தொடங்கியதும் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மத்திய அரசு தளர்வுகளை அறிவித்துள்ளது. 

மேலும் செய்திகள்