சிறையில் இருக்கும் அர்னாப் கோஸ்வாமியின் உடல்நலம் குறித்து மராட்டிய கவர்னர் கவலை

சிறையில் இருக்கும் அர்னாப் கோஸ்வாமியின் உடல்நலம் குறித்து மராட்டிய கவர்னர் பி.எஸ். கோஷ்யரி கவலை தெரிவித்துள்ளார்.

Update: 2020-11-09 07:56 GMT
மும்பை

ரிப்போப்ளிக் செய்தி தொலைக்காட்சி தொகுப்பாளர் அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டு மும்பை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

சிறைச்சாலையில் "தாக்கப்பட்டார்" என்றும் அவரது குடும்பத்தினரை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த நிலையில் இந்த விவகாரத்தில் மராட்டிய கவர்னர்  தலையிட்டு தனது கவலையை மாநில அரசிடம் தெரிவித்து உள்ளார

மராட்டிய கவர்னர் பி.எஸ். கோஷ்யரி மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்குடன் பேசினார் மற்றும் ரிப்போப்ளிக் செய்தி தொலைக்காட்சி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியின் பாதுகாப்பு மற்றும் உடல்நலம் குறித்த தனது கவலையை அவரிடம் தெரிவித்தார். கோஸ்வாமியின் குடும்பத்தினரைப் பார்க்கவும், அவருடன் பேசவும் அனுமதிக்குமாறு உள்துறை அமைச்சரிடம் அவர் கேட்டுக் கொண்டார் என ராஜ்பவன் வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

மேலும் செய்திகள்