இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 47 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து 54 ஆயிரம் பேர் குணம் அடைந்துள்ளனர்.

Update: 2020-11-06 05:09 GMT
புதுடெல்லி,

இந்தியாவில்  உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாக குறைந்து வருகிறது. எனினும், சில தினங்களில் சற்று அதிகமாகவும் பாதிப்பு பதிவாகி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நேற்று 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு இருந்த நிலையில், நேற்றை விட  5 சதவீதம் பாதிப்பு  இன்று குறைந்துள்ளது. 

அதாவது கடந்த 24 மணி நேரத்தில் 47 ஆயிரத்து 638-பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 84 லட்சத்து 11 ஆயிரத்து 724- ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 670- பேர் உயிரிழந்துள்ளனர். 

கொரோனா தொற்று பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 24 ஆயிரத்து ,985-ஆக  உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 20 ஆயிரத்து 773- ஆக உள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில் 54,157 பேர் தொற்றில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.   தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 77 லட்சமாக உள்ளது. 

மேலும் செய்திகள்