டெல்லியில் கொரோனா பரவலின் 3-வது அலை வீசுகிறது: முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் செப்டம்பர் மாதத்தில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாக படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனால், டெல்லியில் கடந்த சில நாட்களாக தினம் தினம் புதிய உச்சத்தை கொரோனா பாதிப்பு எட்டி வருகிறது. குறிப்பாக நேற்று டெல்லியில் இதுவரை இல்லாத அளவாக நேற்று 6 ஆயிரத்து 700-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு பதிவானது.
இந்த நிலையில், டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது: -
”டெல்லியில் கடந்த சில நாள்களாகத் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலின் மூன்றாவது அலை என இதை நாம் அழைக்கலாம் என நினைக்கிறேன்.
தொற்று பரவும் விகிதத்தைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. கொரோனாவை கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன” என்றார்.