பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் காணொலி வாயிலாக மத்திய அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு தற்போது படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று காலை 10.30 மணி அளவில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது.
காணொலி வாயிலாக நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பருமழை, பள்ளி, கல்லூரிகள் திறப்பு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அக்டோபர் 29 ஆம் தேதி நடைபெற்றஅமைச்சரவைக் கூட்டத்தில், சணல் பொருள்களில் கட்டாய பேக்கேஜிங் செய்வதற்கான விதிமுறைகளை நீட்டிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்தது, உணவு தானியங்களில் 100 சதவீதத்தையும், 20 சதவீத சர்க்கரையையும் பன்முகப்படுத்தப்பட்ட சணல் பைகளில் அடைக்க வேண்டும் தெரிவிக்கப்பட்டது.