இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து புதிதாக மேலும் 53,357 பேர் குணமடைந்தனர்

இந்தியாவில் இன்று மேலும் 46,254 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

Update: 2020-11-04 04:08 GMT
புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 46,254 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்புகள் உறுதியாகி உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணைக்கை 83,13,877 ஆக உயர்ந்துள்ளன, 

இன்று காலை அறிவிக்கபட்ட 514 புதிய இறப்புகளுடன், நாட்டில் கொரோனா பாதிப்பு இறப்பு மொத்த எண்ணிக்கை 1,23,611 ஆக உயர்ந்து உள்ளது.

கொரோனாவில் இருந்து மொத்தம் 76,56,478 பேர் மீண்டு வீடு திரும்பி உள்ளனர், இதில் நேற்று மட்டும் 53,357 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். நாட்டில் தற்போது 5,33,787 பேர் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி, நேற்று வரை மொத்தம் 11,29,98,959 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன என்றும், அதில் நேற்று மட்டும் 12,09,609 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்