பீகார் சட்டமன்ற தேர்தல்: 2-ஆம் கட்ட தேர்தலில் 53.51 சதவீத வாக்குகள் பதிவு

பீகாரில் முதல் கட்ட தேர்தல், கடந்த 28-ந் தேதி நடந்து முடிந்த நிலையில் 2-ம் கட்ட தேர்தல், இன்று நடைபெற்றது.

Update: 2020-11-03 13:45 GMT
பாட்னா,

பீகாரில் பா.ஜ.க. கூட்டணியுடன் நிதிஷ்குமார் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனதாதள கட்சியின் 5 ஆண்டு கால ஆட்சி நிறைவடைய உள்ள நிலையில் அம்மாநில சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.  இதன்படி, முதல் கட்ட தேர்தல், கடந்த 28-ந் தேதி நடந்து முடிந்தது. 2-ம் கட்ட தேர்தல், இன்று நடைபெற்றது.

17 மாவட்டங்களில்  உள்ள 94 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தல் நடக்கும் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. முக கவசம், சமூக இடைவெளி, கிருமி நாசினி, வாக்காளர்களுக்கு ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் கையுறை வழங்குதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

2 ஆம் கட்ட சட்டமன்ற தேர்தலில் 53.51 சதவித வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது 2 ஆம் கட்ட வாக்குப்பதிவில் 56. 9 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

மேலும் செய்திகள்