கேரளாவில் மேலும் 6,862 பேருக்கு கொரோனா தொற்று

கேரளாவில் மேலும் 6 ஆயிரத்து 862 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-11-03 13:09 GMT
திருவனந்தபுரம்,

கேரளத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 6,862 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கேரள சுகாதாரத்துறை கூறியிருப்பதாவது:-

கேரளாவில் இன்று புதிதாக 6,862 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு 4,51,131 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் மேலும் 26 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த பலி எண்ணிக்கை 1,559 ஆக உயர்ந்துள்ளது. 

இன்று ஒரே நாளில் 8,802 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை  3,64,745 ஆக உள்ளது. தற்போது 84,713 பேர்  தொற்று பாதிப்புடன் சிகிச்சை  வருகின்றனர்.

மேலும் செய்திகள்