பாஜகவுடன் கூட்டணியா? பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி விளக்கம்

பகுஜன் சமாஜ் கட்சி வகுப்புவாதக் கட்சியுடன் இணைந்து போட்டியிட முடியாது என்று மாயாவாதி தெரிவித்தார்.

Update: 2020-11-02 09:43 GMT
பாட்னா,

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.  அப்போது அவர் கூறியதாவது: -

''எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளரைத் தோற்கடிக்க எங்கள் கட்சி உறுதியாக உள்ளது. இதற்காக பாஜக உட்பட எந்தக் கட்சி வேட்பாளருக்கும் ஆதரவளிக்கத் தயார் என்று நான் கடந்த வாரம் பேசியது  திரித்து பரப்பப் படுகிறது. எங்களுக்கும் முஸ்லிம் சமுதாயத்தினருக்கும் இடைவெளியை  ஏற்படுத்த காங்கிரஸ் சமாஜ்வாடியும் முயற்சிக்கின்றன. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். 

இதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது இதுதான். பகுஜன் சமாஜ் கட்சி, பாஜகவுடன் கூட்டணி என்பது எதிர்காலத்தில் எந்தவொரு தேர்தலிலும் சாத்தியமில்லை. பகுஜன் சமாஜ் கட்சி வகுப்புவாதக் கட்சியுடன் இணைந்து போட்டியிட முடியாது. எங்கள் சித்தாந்தமும் பாஜகவின் சித்தாந்தமும் வேறு வேறானது.  பாஜகவுடன் கூட்டணி வைப்பதற்கு பதிலாக அரசியலில் இருந்து ஓய்வு பெற்று விடுவேன்” என்றார். 

மேலும் செய்திகள்