இயற்கை அழகால் உலகெங்கிலும் உள்ள மக்களை ஈர்க்கும் தலமாக கேரள மாநிலம் விளங்குகிறது - பிரதமர் மோடி

இயற்கை அழகால் உலகெங்கிலும் உள்ள மக்களை ஈர்க்கும் தலமாக கேரள மாநிலம் விளங்குகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Update: 2020-11-01 12:29 GMT
புதுடெல்லி,

கேரள மாநிலத்தின் நிறுவன தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு அந்த மாநில மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

"நாட்டின் வளர்ச்சிக்குத் தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் கேரள மக்களுக்கு மாநில தின வாழ்த்துகள். தன் இயற்கை அழகால் உலகெங்கிலும் உள்ள மக்களை ஈர்க்கும் தலமாக இந்த மாநிலம் விளங்குகிறது. கேரளாவின் இடையறாத வளர்ச்சிக்காக நான் பிரார்தித்துக் கொள்கிறேன்", 

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்