கேரளாவில் 10 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு

கொரோனா தாக்கத்தின் அடிப்படையில், தடையை நீட்டித்து கொள்ள அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு அதிகாரம் வழங்கி தலைமைச் செயலாளர் விஸ்வாஸ் மேத்தா உத்தரவிட்டு இருந்தார்.

Update: 2020-10-31 20:45 GMT
திருவனந்தபுரம், 

கேரளாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் அக்டோபர் மாதம் 1-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை 144 தடை உத்தரவை கேரள அரசு அமல்படுத்தியது. மேலும் கொரோனா தாக்கத்தின் அடிப்படையில், தடையை நீட்டித்து கொள்ள அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு அதிகாரம் வழங்கி தலைமைச் செயலாளர் விஸ்வாஸ் மேத்தா உத்தரவிட்டு இருந்தார்.

இந்த நிலையில் ஒரு மாதம் நீடித்த 144 தடை உத்தரவு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இன்று நவம்பர் 1 முதல், திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டை ஆலப்புழை, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், மலப்புரம், கண்ணூர் ஆகிய 10 மாவட்டங்களுக்கு 15-ந் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. 

கோழிக்கோடு மாவட்டத்திற்கு தடை உத்தரவு மேலும் 7 நாட்கள் மட்டும் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்