58 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அக்டோபர் மாதத்தில் டெல்லியில் கடும் குளிர்..!
டெல்லியில் நிலவும் கடும் குளிர் மற்றும் காற்று மாசு ஆகியவற்றால் மக்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
புதுடெல்லி,
தலைநகர் டெல்லியில் நடப்பு அக்டோபர் மாதத்தில் கடந்த 58 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடும் குளிர் பதிவாகியுள்ளது. நிகழாண்டு அக்டோபர் மாதத்தில் 17.2 டிகிரி செல்சியஸ் ஆக குறைந்தபட்ச வெப்ப நிலை பதிவானது. 1962- ஆம் ஆண்டுக்கு பிறகு அக்டோபர் மாதத்தில் வெப்ப நிலை இந்த அளவு இப்போதுதான் குறைந்துள்ளது.
1962- ஆம் ஆண்டு டெல்லியில் அக்டோபர் மாதத்தில் வெப்ப நிலை 16.9 டிகிரி செல்சியஸ் ஆக பதிவானது. வழக்கமாக டெல்லியில் அக்டோபர் மாதத்தில் 19.1 டிகிரி செல்சியஸ் என்ற அளவுக்கே வெப்ப நிலை பதிவாகும்.
டெல்லியில் நிலவும் கடும் குளிர் மற்றும் காற்று மாசு ஆகியவற்றால் மக்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.