முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு நாள்; நினைவிடத்தில் பிரியங்கா காந்தி மலரஞ்சலி

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் பிரியங்கா காந்தி மலரஞ்சலி செலுத்தினார்.

Update: 2020-10-31 04:15 GMT
புதுடெல்லி,

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 36வது நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.  தனது பாதுகாவலர்களாலேயே சுட்டு கொல்லப்பட்ட அவரது நினைவு தினத்தினை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்திற்கு இந்திரா காந்தியின் பேத்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் உத்தர பிரதேச கிழக்கு பகுதி பொது செயலாளரான பிரியங்கா காந்தி சென்றார்.

அவரது நினைவிடத்திற்கு கட்சியின் மூத்த தலைவர்களும் வருகை தந்திருந்தனர்.  இதன்பின்னர் இந்திரா காந்தியின் நினைவிடத்தில் மலர்களை தூவி பிரியங்கா காந்தி மரியாதை செலுத்தினார்.

மேலும் செய்திகள்