சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினம்; டெல்லியில் குடியரசு தலைவர் மலரஞ்சலி செலுத்தினார்
சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினத்தினை முன்னிட்டு டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மலரஞ்சலி செலுத்தினார்.
புதுடெல்லி,
இந்தியாவின் இரும்பு மனிதர் என போற்றப்படும் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது. வலிமையான ஒன்றுபட்ட இந்தியாவை அமைக்க பாடுபட்ட அவரது பிறந்த தினத்தினை முன்னிட்டு அவருக்கு பல்வேறு தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
டெல்லியில் அலங்கரிக்கப்பட்ட அவரது உருவ படத்திற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மலரஞ்சலி செலுத்தினார். இதே போன்று குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்டோரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு மரியாதை செலுத்தினர்.