பிரான்ஸ் தேவாலயத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்

பிரான்ஸ் தேவாலயத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2020-10-29 14:49 GMT
புதுடெல்லி, 

பிரான்ஸ் நாட்டின் நைஸ் நகரில் நோட்ரி டேமி என்ற கிருஸ்தவ தேவாலயத்தில் இன்று மதியம் கத்தியுடன் நுழைந்த மர்மநபர் அங்கு இருந்தவர்கள் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தினான். மர்மநபர் நடத்திய இந்த கொடூர கத்திக்குத்து தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய மர்மநபர் ஒரு பெண்ணை தலைத்துண்டித்து கொலை செய்தான். இந்த தாக்குதலில் பலர் படுகாயமடைந்தனர்.

இதனிடையே நபிகள் நாயகத்தின் கேளிச்சித்திரத்தை பள்ளி வகுப்பில் மாணவர்களிடம் காட்டிய வரலாற்று ஆசிரியர் சாமுவேல் பெடியின் செயலுக்கு தண்டனை கொடுக்கும் விதமாகவே இந்த தாக்குதலை நடத்தியதாக பயங்கரவாதி தெரிவித்ததாக தகவல் வெளியானது. 

இந்நிலையில் பிரான்ஸ் தேவாலயத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது டுவிட்டரில், “நைஸ் நகரில் தேவாலயத்திற்குள் இன்று நடந்த கொடூரமான தாக்குதல் உட்பட, பிரான்சில் தற்போது நடந்து வரும் பயங்கரவாத தாக்குதல்களை நான் கடுமையாக கண்டிக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும், பிரான்ஸ் மக்களுக்கும் எங்கள் ஆழ்ந்த மற்றும் மனமார்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியா எப்போதும், பிரான்சுடன் துணை நிற்கும்” என்று பதிவிட்டுள்ளார். 

மேலும் செய்திகள்