கொரோனா வைரசை பரப்பும் குழந்தைகள்; ஐ.சி.எம்.ஆர். அறிவிப்பு
கொரோனா வைரசை குழந்தைகள் பரப்புவதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன என ஐ.சி.எம்.ஆர். தெரிவித்து உள்ளது.
புதுடெல்லி,
நாட்டில் குழந்தைகள் இடையே கொரோனா பாதிப்புகள் பரவுவது பற்றி ஐ.சி.எம்.ஆர். இயக்குனர் ஜெனரல் பல்ராம் பார்கவா செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, 17 வயதுக்கு உட்பட்டவர்களில் 8 சதவீதம் பேருக்கே தொற்றுகள் ஏற்பட்டு உள்ளன.
இதுவே 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை எடுத்து கொண்டால், அது ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்கும்.
எனினும், குழந்தைகள் கொரோனா வைரசிடம் இருந்து பாதுகாக்கப்பட்டவர்களாக உள்ளனர் என தொடக்கத்தில் நினைத்திருந்த நேரத்தில், அவர்கள் வைரசை பரப்புபவர்களாகவும் இருப்பதற்கான சில சான்றுகள் கிடைத்து உள்ளன என தெரிவித்து உள்ளார்.