பா.ஜனதா தலைவர் தொடர்ந்த சசிதரூருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை- டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு

பா.ஜனதா தலைவர் தொடர்ந்த சசிதரூருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு டெல்லி ஐகோர்ட்டு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-10-16 23:46 GMT
புதுடெல்லி,

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், திருவனந்தபுரம் தொகுதி எம்.பி.யுமான சசிதரூர், கடந்த 2018-ம் ஆண்டு பிரதமர் மோடி பற்றி கூறும்போது, ‘ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஒருவர் மோடியை சிவலிங்கத்தின் மீது அமர்ந்திருக்கும் தேள் என ஒப்பிட்டுள்ளார்’ என்று கூறியிருந்தார்.

இது தனது மத உணர்வுகளை புண்படுத்தியதாக பா.ஜனதா தலைவரான ராஜீவ் பாப்பர், டெல்லி கோர்ட்டில் சசிதரூருக்கு எதிராக குற்ற அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சசிதரூருக்கு விசாரணை கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. 

பின்னர் இந்த வழக்கை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் சசிதரூர் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி சுரேஷ் குமார் கெயிட், சசிதரூர் மீதான குற்ற அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.

மேலும் சசிதரூரின் மனு மீது பதிலளிக்குமாறு ராஜீவ் பாப்பருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கை டிசம்பர் 9-ந்தேதிக்கு ஒத்தி வைத்தார்.

மேலும் செய்திகள்