இந்திய அரசின் ஆரோக்ய சேது மொபைல் செயலிக்கு உலக சுகாதார நிறுவனம் பாராட்டு
கொரோனா வைரசிஸ் பாதிப்பு அதிகமாக உள்ள இடங்களை அடையாளம் இந்திய அரசின் ஆரோக்ய சேது மொபைல் செயலி உதவுவதாக உலக சுகாதார நிறுவனம் பாராட்டியுள்ளது.
புதுடெல்லி
தங்களை சுற்றி உள்ள கொரோனா பாதிப்புகளை மக்கள் அறியவும், நோய்தடுப்பு குறித்த அறிவுரைகளை வழங்கும் வகையிலும் கடந்த ஏப்ரல் மாதம் மத்திய அரசு ஆரோக்ய சேதுவை அறிமுகம் செய்தது.
கொரோனா வைரசிஸ் பாதிப்பு அதிகமாக உள்ள இடங்களை அடையாளம் காண இந்திய அரசின் ஆரோக்ய சேது மொபைல் செயலி உதவுவதாக உலக சுகாதார நிறுவனம் பாராட்டியுள்ளது.
இந்த செயலியை சுமார் 15 கோடி மக்கள் பதிவிறக்கம் செய்து உள்ளதாகவும், கொரோனா ஹாட்ஸ்பாட்டுகளை கண்டறித்து சோதனைகளை விரிவுப்படுத்த சுகாதார துறைக்கு இது உதவுவதாகவும் உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் பாராட்டி உள்ளார்.