கேரளாவில் கடற்கரைகளைத் தவிர மாநிலத்தின் அனைத்து சுற்றுலா தலங்களும் இன்று திறப்பு
கேரளாவில் கடற்கரைகளைத் தவிர மாநிலத்தின் அனைத்து சுற்றுலா தலங்களையும் திறக்க அரசு முடிவு செய்துள்ளது.
திருவனந்தபுரம்:
கொரோனா தொற்ரால் 6 மாதங்களுக்கும் மேலாக தடை விதிக்கபட்டு இருந்த கடற்கரைகளைத் தவிர மாநிலத்தின் அனைத்து சுற்றுலா தலங்களையும் திறக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.
மலைவாசஸ்தலங்கள், சாகச மற்றும் நீர் சுற்றுலா இடங்கள் திங்கள்கிழமை முதல் பயணிகளை வரவேற்கும். நவம்பர் 1 முதல் கடற்கரைகள் திறக்கப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு நாட்களாக கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிரது. கேரளாவின் கொரோனாபாதிப்பு இன்று 9,347 புதிய தொற்றுநோய்களுடன் 2,87,202 ஆக உயர்ந்துள்ளது. இருந்தும் சுற்றுலாத் துறையை புதுப்பிக்கும் முயற்சியில் கேரள மாநில அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
சுற்றுலாப் பயணிகளுக்கான வழிகாட்டுதல்கள்
சுற்றுலா இடங்களை பார்வையிடும்போது பயணிகள் அனைத்து கொரோனா தொற்று நெறிமுறையையும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
7 நாட்களுக்குள் குறுகிய பயணங்களுக்கு கேரளாவுக்குள் நுழையும் சுற்றுலாப் பயணிகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு சான்றிதழ் தேவையில்லை.
அனைத்து சுற்றுலாப் பயணிகளும் www.covid19jagratha.kerala.nic.in இல் பதிவு செய்ய வேண்டும்
ஏழு நாட்களுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் திரும்பி வரவில்லை என்றால், அவர்கள் தங்கள் சொந்த செலவில் கொரோனா வைரஸ் சோதனைகளுக்கு உட்படுத்த வேண்டும்.
மாநிலத்தில் ஏழு நாட்களுக்கு மேல் செலவிட விரும்பும் சுற்றுலாப் பயணிகள் கொரோனா எதிர்மறை சான்றிதழை வைத்திருக்க வேண்டும் அல்லது மாநிலத்திற்குள் நுழைந்த உடனேயே சோதனைகளுக்கு உட்படுத்த வேண்டும். இல்லையெனில், அவர்கள் ஏழு நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டியிருக்கும்.
முககவசங்கள் மற்றும் சானிடிசரைப் பயன்படுத்துவது மற்றும் இரண்டு மீட்டர் சமூக தூரத்தை பராமரிப்பது கட்டாயமாகும்.
சுற்றுலாப் பயணிகள் தங்கள் பயணத்தின் போது வைரஸ் அறிகுறிகளை உருவாக்கினால், அவர்கள் டிஷா ஹெல்ப்லைனைத் தொடர்புகொண்டு சுகாதார ஊழியர்களின் உதவியை நாட வேண்டும்.