மணிப்பூரில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோலில் 5.3 ஆக பதிவு
மணிப்பூரில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 5.3 ஆக பதிவாகி உள்ளது,
பிஷ்ணுபூர்,
மணிப்பூரில் உள்ள பிஷ்ணுபூர் பகுதியில் இரவு 11.08 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 5.3 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி மணிப்பூர் பிஷ்ணுபூரில் இருந்து 30 கி.மீ. மேற்கு-வடமேற்கில் இருந்தது என்று தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் நிலத்துக்கு அடியில் 5 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் உயிரிழப்போ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.