இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 79,476-பேருக்கு கொரோனா தொற்று

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 79 ஆயிரத்து 476 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-10-03 04:14 GMT
புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 79 ஆயிரத்து 476 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,069-பேர் இந்தியாவில் உயிரிழந்ததாகவும், இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 842 ஆக உயர்ந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

கொரோனா தொற்று பாதிப்புடன்  9 லட்சத்து 44 ஆயிரத்து 996 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 64 லட்சத்து 73 ஆயிரமாக உள்ளது. அதேபோல் தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 54 லட்சத்து 27 ஆயிரமாக உள்ளது. 

மேலும் செய்திகள்