இளம்பெண் உடலை அவசரமாக எரித்தது ஏன்? உத்தரபிரதேச டி.ஜி.பி.யிடம் விளக்கம் கேட்கிறது, தேசிய பெண்கள் ஆணையம்
கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட பட்டியல் இன இளம்பெண் உடலை குடும்பத்தினர் அனுமதியின்றி போலீசார் அவசரமாக தகனம் செய்தது, சர்ச்சையை எழுப்பி உள்ளது.
புதுடெல்லி,
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட பட்டியல் இன இளம்பெண், டெல்லி ஆஸ்பத்திரியில் உயிரிழந்தார். அவரது உடலை குடும்பத்தினர் அனுமதியின்றி போலீசார் அவசரமாக தகனம் செய்தது, சர்ச்சையை எழுப்பி உள்ளது.
இதை தேசிய பெண்கள் ஆணையம் தானாக முன்வந்து வழக்காக எடுத்துக் கொண்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, உத்தரபிரதேச போலீஸ் டி.ஜி.பி.க்கு தேசிய பெண்கள் ஆணையம் கடிதம் எழுதி உள்ளது. அதில், “அந்த இளம்பெண் உடலை குடும்பத்தினரை ஒதுக்கி வைத்து விட்டு, நள்ளிரவு நேரத்தில் எரிப்பதற்கு போலீசார் அவசரம் காட்டியது ஏன்? என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டும். விரைவிலேயே இந்த பதிலை அனுப்புங்கள்” என்று கூறியுள்ளது.