புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராக பஞ்சாபில் விவசாயிகள் 7-வது நாளாக ரெயில் மறியல்

3 வேளாண்மை சட்ட மசோதாக்களுக்கு எதிராக, பஞ்சாபில் விவசாயிகள் ‘ரெயில் ராகோ’ என்ற பெயரில் ரெயில் நிறுத்த போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.

Update: 2020-09-30 23:18 GMT
அமிர்தசரஸ்,

மத்திய அரசு சமீபத்தில் நிறைவேற்றிய 3 வேளாண்மை சட்ட மசோதாக்களுக்கு எதிராக, பஞ்சாபில் விவசாயிகள் ‘ரெயில் ராகோ’ என்ற பெயரில் ரெயில் நிறுத்த போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். நேற்று 7-வது நாளாக பல்வேறு இடங்களில் ரெயில் மறியல் போராட்டம் நடந்தது. பத்தின்டா என்ற இடத்தில் பஞ்சாபி பாடகர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், புதிய விவசாய சட்டங்களை திரும்பப் பெறக்கோரி முழக்கமிட்டனர். அதுவரை தங்கள் ரெயில் மறியல் போராட்டத்தை நீட்டிப்பது என்றும், அடுத்த மாதம் முதல் போராட்டத்தை இன்னும் தீவிரப்படுத்தவும் முடிவு செய்திருப்பதாக போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூறினர். சில தனியார் நிறுவனங்களை புறக்கணிக்கவும், விவசாய சங்கங்கள் கூட்டமைப்பு முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

போராட்டம் வலுப்பெற்றதைத் தொடர்ந்து பஞ்சாபில் ரெயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்