மாநிலங்களவையை இன்றோடு காலவரையின்றி ஒத்திவைக்க அரசு பரிந்துரை - அமைச்சர் முரளிதரன் தகவல்
மாநிலங்களவையை இன்றோடு காலவரையின்றி ஒத்திவைக்க அரசு பரிந்துரைத்துள்ளதாக விவகாரத்துறை இணை அமைச்சர் முரளிதரன் தகவல் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மாநிலங்களவையில் வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, அந்த மசோதாவுக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். சட்ட புத்தகம் கிழிப்பு, அவையை நடத்திய துணைத்தலைவர் மீது பாய்ந்தது என பல்வேறு விரும்பத்தகாத சம்பவங்கள் அரங்கேறின. இதனைத்தொடர்ந்து நேற்று ஒரே நாளில் 7 மசோதாக்கள், மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையிலும் நிறைவேறின.
இந்நிலையில் மாநிலங்களவையை இன்றோடு காலவரையின்றி ஒத்திவைக்க அரசு பரிந்துரைத்துள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.