போதைப் பொருள் விவகாரம்: நடிகை ரகுல் பிரீத் சிங் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு
போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக நடிகை ரகுல் பிரீத் சிங் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இதுதொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்துக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
புதுடெல்லி,
கார்த்தி நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘தேவ்’, சூர்யாவின் ‘என்.ஜி.கே.’ உள்ளிட்ட தமிழ்ப்படங்களில் நடித்தவர் ரகுல் பிரீத் சிங். இவை தவிர இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்து உள்ளார்.
நடிகை ரகுல் பிரீத் சிங் டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு ஒன்றில், இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை மற்றும் போதைப் பொருள் வழக்கில் கைதாகி உள்ள நடிகை ரியா சக்ரவர்த்தியுடன் தன்னை இணைத்து ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிடுவதாகவும் அவற்றுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி உள்ளார்.
இந்த மனு நேற்று டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி நவீன் சாவ்லா முன்பு காணொலி காட்சி மூலம் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனு மீது மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், பிரசார் பாரதி, பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா ஆகியவை பதிலளிக்க நோட்டீஸ் அனுப்புமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக ஊடகங்கள் செய்திகளை வெளியிடுவதில் கட்டுப்பாட்டை கடைபிடிக்கவேண்டும் என்றும், பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகள் செய்திகளை வெளியிடுவதில் கடைபிடிக்க வேண்டிய அனைத்து சட்டவிதிமுறைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் கருத்து தெரிவித்து விசாரணையை அடுத்த மாதம் 15-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.