வரலாற்று உடன்படிக்கையை சீனா மதிக்கவில்லை - ராஜ்நாத் சிங்
வரலாற்று உடன்படிக்கையை சீனா மதிக்கவில்லை என்று மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
மக்களவை கூட்டம் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. அதில் சீன - இந்திய எல்லை பிரச்சினை தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்தார்.
இதுதொடர்பாக அவர் பேசுகையில், “இந்தியா-சீனா எல்லைப் பகுதிகளில் அமைதியை நிலைநாட்டவும், இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கு இது அவசியம் என்பதை இந்தியாவும் சீனாவும் ஒப்புக்கொண்டுள்ளன.
இந்தியா மற்றும் சீனா எல்லைப் பிரச்சினை தீர்க்கப்படாமல் உள்ளது. இப்போது வரை, பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு எதுவும் இல்லை. எல்லையில் சீனா உடன்படவில்லை. எல்லையின் பாரம்பரிய மற்றும் வழக்கமான எல்லை சீரமைப்பை சீனா அங்கீகரிக்கவில்லை. எல்லையில் நமது வீரர்கள் கடினமான சோதனைகளை எதிர்கொண்டு நாட்டை காத்து வருகின்றனர். சீனாவுடனான எல்லை பிரச்சனை இன்னும் தீரவில்லை. லடாக் எல்லை பிரச்னை காரணமாக இந்திய சீன உறவில் தாக்கம் ஏற்படும்.
வரலாற்று உடன்படிக்கையை சீனா மதிக்கவில்லை. ஒருதலைப்பட்சமாக நிலைமையை மாற்றுவதற்கான முயற்சிகள் இருதரப்பு ஒப்பந்தங்களை மீறுவதாக உள்ளதாக சீனாவிடம் கூறியுள்ளோம். 1960 களில் ஒப்புக் கொள்ளப்பட்ட வழக்கமான வழியை நாங்கள் பின்பற்றி வருகிறோம், ஆனால் சீனா இப்போது இதை ஏற்கவில்லை” என்று தெரிவித்தார்.