எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்- இந்தியா தக்க பதிலடி
எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது.
ஸ்ரீநகர்,
போர் நிறுத்த ஒப்பந்தங்களை மீறி எல்லையில் அவ்வப்போது தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் ராணுவம் வாடிக்கையாகக் கொண்டுள்ளது. பாகிஸ்தானின் இத்தகைய அத்துமீறல்களுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுக்க தவறுவதில்லை. எனினும், பாகிஸ்தான் எல்லையில் அத்துமீறி தாக்குவதை நிறுத்தியபாடில்லை.
அந்த வகையில், ஜம்மு காஷ்மீரில் உள்ள மன்கோட் மற்றும் கல்பூர் ஆகிய செக்டார்களில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இரவு 8 மணியளவில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்திய நிலையில், இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. இந்த தகவல்களை இந்திய ராணுவ வட்டாரம் தெரிவித்துள்ளது.