காஷ்மீரில் என்கவுண்ட்டரில் கொல்லப்பட்ட பயங்கரவாதி உடல் மீட்பு

காஷ்மீரில் துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்து தப்பியோடிய பயங்கரவாதியின் உடலை பாதுகாப்பு படையினர் கண்டெடுத்தனர்.

Update: 2020-09-12 04:44 GMT
ஸ்ரீநகர்,

மத்திய காஷ்மீர் மாவட்டமான பட்காமில் உள்ள கவுசா பகுதியில் கடந்த 7-ந்தேதி அன்று பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் பாதுகாப்பு படையினரின் துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்து பயங்கரவாதி ஒருவன் தப்பியோடி விட்டான். அவனை பாதுகாப்பு படையினர் 4 நாட்களாக தேடினார்கள்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு அங்குள்ள ஓடையில் அவன் பிணமாக மீட்கப்பட்டான். விசாரணையில் அவன் தெற்கு காஷ்மீர் புல்வாமா மாவட்டம் அக்லாரை சேர்ந்த அகிப் அகமது லோனே என்பதும், ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவன் என்பது தெரியவந்தது. அங்கு கிடந்த பையில் இருந்து பயங்கர ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்