எல்லையில் காணாமல் போன 5 இந்தியர்களை சீனா நாளை ஒப்படைக்கிறது - கிரண் ரிஜிஜூ தகவல்
சீன-இந்திய எல்லையில் காணாமல் போன 5 இந்தியர்களை சீனா நாளை ஒப்படைக்கிறது என்று மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
அருணாசலப் பிரதேச மாநிலம் உயர் சுபன்சிரி மாவட்டத்தில் உள்ள சீன-இந்திய எல்லையில் இருந்து இந்த ஐந்து இளைஞர்கள் சில தினங்களுக்கு முன் காணாமல் போனார்கள்.
வழிதவறி சென்ற 5 இந்தியர்களையும் சீன ராணுவம் கடத்தி வைத்திருப்பதாக புகார் எழுந்தது. டோச் சிங்கம், பிரசாத் ரிங்லிங், டோங்டு எபியா, தனு பேக்கர் மற்றும் நகரு டிரி என ஐந்து பேர் காணாமல் போனதாக அடையாளம் காணப்பட்டனர்.
கவனக்குறைவாக சீனா பக்கத்திற்குச் சென்ற 5 இந்தியர்களையும் தங்கள் பக்கத்தில் இருப்பதை சீன ராணுவம் இரண்டு நாட்கள் முன் உறுதிப்படுத்தியது. அவர்கள் விரைவாக முறைப்படி மீட்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என இந்திய இராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த 5 இளைஞர்களை நாளை சீன இராணுவம் ஒப்படைக்க உள்ளதாகவும், இந்த ஒப்படைப்பு நாளை எப்போது வேண்டுமானாலும் நியமிக்கப்பட்ட இடத்தில் நடைபெறும் என மத்திய மந்திரியும், அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த எம்.பி.யுமான கிரேன் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.