மராட்டிய அரசு கொரோனாவிற்கு எதிராக போராடாமல்,கங்கனாவிற்கு எதிராக போராடி வருகிறது - தேவேந்திர பட்னாவிஸ் விமர்சனம்
மராட்டிய அரசு கொரோனாவிற்கு எதிராக போராடாமல், கங்கனாவிற்கு எதிராக போராடி வருகிறது என்று முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் விமர்சித்துள்ளார்.
மும்பை,
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு விசாரணை தொடர்பாக மும்பை போலீசாரை குற்றம்சாட்டிய நடிகை கங்கனா ரணாவத், மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என கூறினார். இதற்கு ஆளும் சிவசேனா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து சிவசேனாவுக்கும், நடிகைக்கும் மோதல் உண்டானது.
மேலும் பலத்த எதிர்ப்பை மீறி அவர் நேற்று முன்தினம் மும்பை வந்தார். இதற்கிடையே பாந்திரா பாலிஹில்லில் உள்ள கங்கனா ரணாவத் பங்களாவில் சட்டவிரோத கட்டுமானங்கள் செய்யப்பட்டதாக கூறி மாநகராட்சியினர் அவற்றை இடித்து தள்ளினர்.
இதனால் ஆத்திரமடைந்த நடிகை கங்கனா ரணாவத், ‘உத்தவ் தாக்கரே என்ன நினைத்து கொண்டு இருக்கிறீர்கள்? திரைப்பட மாபியா கும்பலுடன் இணைந்து எனது வீட்டை இடித்ததன் மூலம், என்னை பழிவாங்கி விட்டதாக நினைக்கிறீர்கள். இன்று எனது வீடு இடிக்கப்பட்டுள்ளது. உங்கள் ஆணவம் நாளை நொறுங்கும் என ஆவேசமாக கூறியிருந்தார்.
இந்தநிலையில் முதல்-மந்திரியை தரக்குறைவான வார்த்தைகளில் பேசியதாக நடிகை கங்கனா ரணாவத் மீது மும்பையை சேர்ந்த வக்கீல் நித்தின் மானே, விக்ரோலி போலீசில் புகார் ஒன்றை அளித்தார்.
இந்த புகாரை என்.சி. வழக்காக போலீசார் பதிவு செய்து கொண்டனர். ஆனால் எப்.ஐ.ஆர். பதிவு செய்யவில்லை. இதற்கிடையே வெளிமாநிலத்தில் இருந்து திரும்பிய நடிகை கங்னாவை தனிமைப்படுத்தலில் இருந்து மாநகராட்சி விலக்கு அளித்துள்ளது.
இந்நிலையில், முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
மராட்டிய அரசு கொரோனாவிற்கு எதிராக போராடாமல், கங்கனாவிற்கு எதிராக போராடி வருகிறது. கங்கனா ரணாவத் விவகாரம் என்பது தற்போது மிகப்பெரிய பிரச்சினையில்லை. ஆனால் அதனை உத்தவ் தாக்கரே மிகப்பெரிய பிரச்சினையாக மாற்றி வருகிறார். பெஹந்தி பஜாரிலுள்ள நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் இல்லத்தை இடிக்க உத்தரவிட்டும் அதனை செய்ய ஊழியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகக் கூறி முதல்-மந்திரி புறக்கணித்தார். ஆனால் கங்கனா ரணாவத்தின் அலுவலகத்தை இடிக்கும் பணியை முதல்-மந்திரி செயல்படுத்துகிறார்.
சுஷாந்த் சிங் ராஜ்புட் மரணத்தில் உண்மைத்தன்மை மறைக்கப்படுகிறது. தற்போது போதைப்பொருள் கடத்தல் விவகாரம் வெளிவந்துள்ளது. இதுகுறித்த விசாரணையை விரிவுப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மராட்டிய அரசு போரிட வேண்டியது கொரோனாவுக்கு எதிராகத்தானே தவிர கங்கனாவுக்கு எதிராக அல்ல. இதில் 50% முயற்சியை மேற்கொண்டிருந்தாலே கொரோனா பரவலை தடுத்திருக்க முடியும்.
நாளொன்றுக்கு 25-30 ஆயிரம் புதிய கொரோனா தொற்றுக்கள் தோன்றுகின்றன. மொத்த கொரோனா பலியில் 40% மராட்டியத்தில் நிகழ்ந்துள்ளது. ஆனால் அரசு இதைப்பற்றி கவலைப்படுவதில்லை