தமிழகத்திற்கு ரூ.335 கோடி நிதி ஒதுக்கீடு- மத்திய நிதி அமைச்சகம் தகவல்
தமிழகத்திற்கு ரூ.335 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சென்னை,
14 மாநிலங்களுக்கு 6 ஆயிரத்து 195 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
15ஆவது நிதி குழுவின் பரிந்துரைபடி மாநிலங்களுக்கு செப்டம்பர் மாதம் வழங்க வேண்டிய மாதாந்திர வருவாய் பற்றாக்குறை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தமிழகத்திற்கு ரூ.335 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.