இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 89, 706-பேருக்கு கொரோனா தொற்று

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 89 ஆயிரத்து 706-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-09-09 04:26 GMT
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா தொற்று பரவலின் வேகம் குறைந்தபாடில்லை. உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகம் காணப்படும் நாடுகள் பட்டியலில் இந்தியா 2-ஆம் இடம் உள்ளது. கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு நிர்வாகங்கள் மேற்கொண்டு வருகின்றன. எனினும் தொற்று பரவல் கட்டுக்குள் வந்தபாடில்லை. 

இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 89 ஆயிரத்து 706 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், 1,115-பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கைஅ 43 லட்சத்து 70 ஆயிரத்து 129 ஆக உள்ளது.  தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 33 லட்சத்து 98 ஆயிரத்து 845-பேர் குணம் அடைந்துள்ளனர்.  தொற்று பாதிப்புடன் 8 லட்சத்து 97 ஆயிரத்து  394 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  கொரோனா பாதிப்பால் இந்தியாவில் இதுவரை 73 ஆயிரத்து 890-பேர் உயிரிழந்துள்ளனர். 

மேலும் செய்திகள்