டெல்லியில் 2 பயங்கரவாதிகள் கைது
டெல்லியில் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுடெல்லி,
டெல்லியின் வடக்கு பகுதியில் பாபர் கல்சா சர்வதேச பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 2 பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்திற்கு வந்த டெல்லி சிறப்பு படை போலீசார், துப்பாக்கி சூடு நடத்தி 2 பேரையும் பிடித்து கைது செய்தனர்.
பிடிபட்டவர்கள் பஞ்சாப் மாநிலத்தின் லூதியானாவை சேர்ந்த புபேந்தர் என்ற திலாவர் சிங், குல்வந்த் சிங் என்றும், 2 பேர் மீதும் பஞ்சாபில் பல குற்றவழக்குகள் இருப்பதும், போலீசாரால் தேடப்பட்டு வந்ததும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 6 துப்பாக்கிகள், 40 தோட்டாக்கள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன.
2 பயங்கரவாதிகளும் தலைநகர் டெல்லியில் நாசவேலைக்கு திட்டமிட்டார்களா? என்பது விசாரணையின் முடிவில் தான் தெரியும் என்று போலீசார் தெரிவித்தனர்.