தொற்று பாதிப்பு குறைந்தாலும் ஏசி பெட்டிகளில் போர்வைகள் வழங்கப்படாது: ரெயில்வே

தொற்று பாதிப்பு குறைந்த பிறகும் ஏசி பெட்டிகளில் போர்வைகள் வழங்கப்படாது என்று ரெயில்வே தெரிவித்துள்ளது.

Update: 2020-09-06 04:44 GMT
புதுடெல்லி,

கொரோனா தொற்று பாதிப்பு குறைந்த பிறகும்  ஏசி பெட்டிகளில் பயணிகளுக்கு போர்வைகள் வழங்கப்படாது என்று  ரெயில்வே வாரிய தலைவர் வினோத் குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து வினோத் குமார் யாதவ் கூறியதாவது:-

கொரோனா தொற்று குறைந்த பிறகு ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய படுக்கைகள் அல்லது பயணிகளே போர்வைகள் மற்றும் படுக்கை விரிப்புகளை கொண்டு வரவேண்டும் என்ற நடைமுறையை பின்பற்ற முடிவு செய்துள்ளோம். இதற்கான விரிவான கொள்கைகள்  வகுக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. ரெயில் பயணத்தின் போது சுத்தத்தை கடைபிடிக்க ரெயில்வே முடிவு செய்துள்ளது. இதன் ஒரு முயற்சியாகவே புதிய நடவடிக்கை கையாளப்பட இருக்கிறது” என்றார். 

மேலும்,  500 ரெயில்களின் சேவையை  ரெயில்வே நிர்வாகம் நிறுத்த இருப்பதாக வெளியான தகவலை திடமாக மறுத்த வினோத் குமார் யாதவ்,  எந்த ஒரு ரெயில் சேவையையும் நிறுத்தவோ, ரெயில் நிலையங்களை மூடவோ எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை என்றார்.

மேலும் செய்திகள்