காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்: இந்திய ராணுவ அதிகாரி வீரமரணம்; 2 வீரர்கள் காயம்

காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அத்துமீறிய தாக்குதலில் இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் வீரமரணம் அடைந்துள்ளார்.

Update: 2020-09-05 15:00 GMT
ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பூஞ்ச் மாவட்டத்தில் ஷாபூர், கிர்னி மற்றும் தேக்வார் ஆகிய பிரிவுகளில் இன்று மாலை 5.30 மணியளவில் பாகிஸ்தான் ராணுவம் சிறிய ரக ஆயுதங்களை கொண்டு இந்தியாவை நோக்கி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ள நிலையில், அதனை மீறும் வகையில் அந்நாட்டு ராணுவம் ஈடுபட்டு உள்ளது.  எனினும் பாகிஸ்தான் ராணுவ தாக்குதலுக்கு உடனடியாக இந்தியாவும் பதிலடி கொடுத்து வருகிறது.

இந்நிலையில், வட காஷ்மீரின் நவ்காம் பிரிவில் பாகிஸ்தான் நடத்திய அத்துமீறிய தாக்குதலில் இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் வீரமரணம் அடைந்துள்ளார்.  2 வீரர்கள் காயமடைந்து உள்ளனர் என இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

மேலும் செய்திகள்