திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சணல் பைகளில் லட்டு பிரசாதம் வினியோகத்திற்கு வரவேற்பு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சணல் பைகளில் லட்டு பிரசாதம் வினியோகத்திற்கு பக்தர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2020-09-05 04:01 GMT
திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த லட்டு பிரசாதம் பிளாஸ்டிக் பைகளில் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. திருமலையில் கடந்த ஆண்டு பிளாஸ்டிக் தடைசெய்யப்பட்டதால் தற்போது சணல் பைகளில் லட்டு பிரசாதம் வழங்க நடவடிகை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி தற்போது சணல் பைகளில் லட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது. 5 லட்டுகள் அடங்கிய பிரசாத பை ரூ.25-க்கும், 10 லட்டுகள் கொண்ட பை ரூ.30-க்கும், 15 லட்டுகள் கொண்ட பை ரூ.35-க்கும், 25 லட்டுகள் கொண்ட பிரசாத பை ரூ.55-க்கும் வழங்கப்படுகிறது. இது பக்தர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்