இந்தியாவில் 10 லட்சத்தில் 49 பேர் கொரோனாவுக்கு பலி; உலக அளவில் மிக குறைவு: அரசு அறிவிப்பு

இந்தியாவில் 10 லட்சம் பேரில் 49 பேர் கொரோனாவுக்கு பலியாகின்றனர் என்றும் உலக அளவில் இது மிக குறைவு என்றும் அரசு அறிவித்துள்ளது.

Update: 2020-09-03 15:09 GMT
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பாதிப்புகளால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி போயுள்ளது.  எனினும், பிற நாடுகளுடன் ஒப்பிடும்பொழுது, இந்தியாவில் இதன் பாதிப்பு மற்றும் பலி விகிதம் மிக குறைவாக உள்ளது என மத்திய அரசு கூறியுள்ளது.

இதுபற்றி மத்திய சுகாதார அமைச்சக செயலாளர் ராஜேஷ் பூஷண் செய்தியாளர்களிடம் இன்று பேசும்பொழுது, உலக நாடுகளுடன் ஒப்பிடும்பொழுது, இந்தியாவில் 10 லட்சம் பேரில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை மிக குறைவாகும்.

நாட்டில் 10 லட்சம் பேரில் 49 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.  இதேபோன்று 10 லட்சம் பேரில் 2,792 பேருக்கே கொரோனா பாதிப்புகள் ஏற்படுகின்றன.  இந்த எண்ணிக்கையும் உலக நாடுகளுடனான ஒப்பீட்டு அளவில் மிக குறைவாகும் என கூறியுள்ளார்.

எனினும், கர்நாடகம் மற்றும் டெல்லியில் கொரோனாவால் உயிரிழந்தோர் விகிதம் அதிகரித்து உள்ளது என கூறியுள்ளார்.  இதன்படி, டெல்லியில் சராசரியாக நாளொன்றுக்கு கொரோனாவால் பலியாகிறவர்களின் விகிதம் 50% அளவிற்கும், கர்நாடகத்தில் 9.6% அளவிற்கும் அதிகரித்து உள்ளது என அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்