இந்தியாவில் கொரோனா வைரஸ் பரிசோதனை 4.50 கோடியை தாண்டியது
இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் பரிசோதனை மாதிரிகளின் மொத்த எண்ணிக்கை 4.50 கோடியை கடந்ததுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்றை கண்டறிவதற்கான பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக தினசரி நோய்த்தொற்று எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்தவண்ணம் உள்ளது.
இந்நிலையில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 4,55,09,380 ஆக உயர்ந்து உள்ளது. நேற்று முன்தினம் 10,12,367 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்று இந்த எண்ணிக்கை மேலும் உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 11,72,179-க்கும் மேற்பட்ட மாதிரிகள் சோதனை செய்யப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது-
பரவலான பகுதிகளில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் அதிக அளவு சோதனைகள் செய்வதால், கோரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை முன்கூட்டியே கண்டறியவும், தடையற்ற தனிமை மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கவும் உதவியாக உள்ளது. இறப்பு விகிதம் குறைவதறகும் வழிவகுக்கிறது என்றும் சுகாதாரத்துறை கூறி உள்ளது.