பீகார் சட்டசபை தேர்தல் பா.ஜனதா கூட்டணியில் இணைந்தார் மஞ்சி

முன்னாள் முதல்-மந்திரி ஜிதன்ராம் மஞ்சி தலைமையிலான இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சி பா.ஜனதா கூட்டணியில் இணைந்தது.

Update: 2020-09-03 01:10 GMT
பாட்னா,

பீகார் சட்டசபை தேர்தல் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் நடைபெறும் என்று தெரிகிறது. அங்கு ராஷ்டிரீய ஜனதாதளம்-காங்கிரஸ் அடங்கிய மகாகூட்டணியில் இருந்து முன்னாள் முதல்-மந்திரி ஜிதன்ராம் மஞ்சி தலைமையிலான இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சி கடந்த மாதம் 20-ந்தேதி விலகியது.

இந்நிலையில், பா.ஜனதா அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணியில் அக்கட்சி இணைந்துள்ளது. நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் இந்த அறிவிப்பை ஜிதன்ராம் மஞ்சி வெளியிட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘தேசிய ஜனநாயக கூட்டணியில் எத்தனை தொகுதி கிடைக்கும் என்பது பிரச்சினை இல்லை. மாநில வளர்ச்சிக்காக அந்த கூட்டணியில் இணைகிறோம். சட்டசபை தேர்தலில் நிதிஷ்குமார் வெற்றி பெற பாடுபடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்